ரஷ்யாவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமப்வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ரஷ்யாவின் டெகஸ்டான் நகரில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று உள்ளது.
தொழிற்சாலை
இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட ஐந்து விபத்துக்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், கடற்கரை அருகே உள்ள நிலப்பரப்பில் உலங்கு வானூர்தி தரையிறங்க முற்பட்டுள்ளது.
அதிகாரிகள் விசாரணை
இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த உலங்கு வானூர்தி இரண்டு துண்டாகி கடல் அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்துள்ளது.

இதையடுத்து, உலங்கு வானூர்தி தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

