முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு

உக்ரைன் நாட்டில் 1986ம் ஆண்டு இடம்பெற்ற வெடி விபத்தால் சேதமடைந்த செர்னோபில் அணு உலையில் இருந்து தற்போது கதிர்வீச்சுக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளதாக சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக நடந்து வரும் பின்னணியில் சேதமடைந்த செர்னோபில் அணு உலையின் கதிர் வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பாதுகாப்பு கவசம் தற்போது சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கவச அமைப்பின் கூரையின் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் எனினும் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, முழுமையான மறு சீரமைப்பு பணி அவசியம் என்று சர்வதேச அணு சக்தி முகமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கவசம் 

இதன்படி அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளமைக்கு ரஷ்யா நடத்திய தாக்குதலே காரணம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு | Nuclear Shield Destroyed By Russia

உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது.

கதிர் வீச்சு வெளியாகி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அந்த பகுதியே மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது.

இரும்புத்திரை நாடாக இருந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது இந்த சம்பவம் பதிவாகியது.

இதனால், அணு உலை வெடி விபத்து பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

சோவியத் யூனியன் பிரிந்து, ரஷ்யாவும், உக்ரைனும் தனித்தனி நாடுகள் ஆன நிலையில் தான் முழுமையான பாதிப்புகள் தெரியவந்தன.

22 ஆயிரம் கோடி

இதையடுத்து, சர்வதேச நாடுகளின் முயற்சியில், சேதமுற்ற அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கின.

ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு | Nuclear Shield Destroyed By Russia

சர்வதேச நாடுகள், தன்னார்வ அமைப்புகள் என 45 நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், அணு உலையை சுற்றிலும் கவச அமைப்பு நிறுவப்பட்டது.

இதன்படி வேறு ஒரு இடத்தில் கவச அமைப்பை நிறுவி, அதை நகர்த்திச்சென்று அணு உலையை மூடி, கதிர் வீச்சு வெளியில் வராமல் செய்தனர்.

இது, உலகின் மிகப்பெரிய நகரும் கட்டுமானம் என்று வர்ணிக்கப்பட்ட கவச அமைப்பாகும்.

100 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப கவச அமைப்பு நிறுவப்பட்டது.

இதற்கான பணிகள், 2010 முதல் 2019ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம், வெடித்துச் சிதறிய அணு உலையில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.