சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் இளம் வயதில் செய்த கொலை பற்றிய விவரத்தை சக்தி தெரிந்துகொள்கிறார். அதை ஜனனியும் மற்ற பெண்களும் கேட்டுவிடுகிறார்கள்.
ஆதி குணசேகரன் சக்தியை எதாவது செய்ய வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்.

நாளைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் நாளைய ப்ரோமோவில் குணசேகரன் ஆவேசமாக ஒரு விஷயம் போனில் சொல்கிறார். சக்தியிடம் இருக்கும் எல்லா விஷயத்தையும் பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டிவிடும்படி யாரிடமோ சொல்கிறார்.
மேலும் சக்தியிடம் ஜனனி போனில் பேசுகிறார். எதாவது அவசரம் என்றால் உடனே எனக்கு கால் பண்ணு என சொல்கிறார்.
குணசேகரன் ஆட்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வருவாரா சக்தி?

