முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர்! ஒப்புக்கொண்ட அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டு காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வரவு செலவு திட்ட விவாத உரையில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

வடக்கின் கல்வி நிலையில் கடந்த காலத்தில் சரிவுகள் காணப்பட்டதாகவும் எனினும் தற்போது அது வலுவடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் மாாப்பியா

மேலும் வடக்கு கல்வி வீழ்ச்சிக்கு போதைப்பொருள் மாாப்பியாக்கள் காரணம் என்றும் விவரித்தார்.

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர்! ஒப்புக்கொண்ட அரசாங்கம் | Military Is Behind Drug Trafficking In The North

இதன்போது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொண்ணம்பலம், ”

அமைச்சரே  வடக்கில் கல்வி புலத்தில் வளர்ச்சி காணப்படுகின்றது என தெரிவித்தீர்கள். அதனை கணக்கெடுப்பின் மூலம் நிறுபிப்பீர்களா? 

மேலும் வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் , அவர்களை எப்போது வெளியேற்ற போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய கடற்றொழில் அமைச்சர்,

காவல்துறையும், இராணுவமும்

வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் கடந்த காலங்களில் காவல்துறையும், இராணுவமும் இணைந்து தொடர்புபட்டுள்ளனர். அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர்! ஒப்புக்கொண்ட அரசாங்கம் | Military Is Behind Drug Trafficking In The North

இதற்கு பின்னால் போதைப்பொருள் மாப்பியாக்களும், உங்கள் கட்சியின் அரசியல் தலையீடுகளும், உங்கள் நண்பர்களின் கட்சியினரும் தொடர்புபட்டுள்ளனர் என்பதை மறந்துவிடவேண்டாம்” என கூறியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய கஜேந்திரகுமார் பொண்ணம்பலம், “வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் என ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்