நாடாளுமன்றத்தில் தன்னை தகாத வார்த்தைகளில் விழித்து பேசியதால் தனது வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாக அர்ச்சுனா ராமநாதன் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரைபின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களை ஆரம்பித்து வைத்து பேசும்போது சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
ஹன்சாட்டில் இருந்து நீக்கம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
08.11.2025 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக விழித்து பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறும். எதிர்காலத்தில் அவ்வாறு செயற்படாதவாாறு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

