அதிகாரத்தை பாவிக்க வேண்டும், துஸ்பிரயோகம் தான் செய்ய கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(11) நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நான் பதவி அதிகாரத்தை 100வீதம் பாவித்துள்ளேன்.
அதனால்தான் அரசதரப்பிலிருந்தோ வேறு பலதரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை.
சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள், அதனை பூக்கடை அரசியலாகவும் மாற்றலாம்.
அதற்கு காலம் சரியான பதில் சொல்லும்.
நெல்சன் மண்டேலா, தந்தை செல்வா ஆகியோர் சாக்கடை அரசியல் செய்யவில்லை.
நான் நீதித்துறையை நேசிக்கின்றேன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா வைக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. மேலும், முகநூல் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

