மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(13) இரவு தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள தொடருந்து கடவைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது செய்யப்பட்டவர் கொழும்பு- கொம்பனிவீதி தொடருந்து நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார்.

இது தொடர்பில் தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

