முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிணறு திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் சில படங்கள் வசூல் என்ற ஓட்டத்தை தாண்டி ரசிகர்களின் சினிமா ரசிப்பு தன்மைக்காக வரும், அந்த வகையில் வந்துள்ள இந்த கிணறு எப்படி பார்ப்போமா.

கிணறு திரைவிமர்சனம் | Kinaru Movie Review

கதைக்களம்

படத்தின் கதைக்களமாக சிறுவர்களை வைத்து தொடங்கியுள்ளனர், 4 சிறுவர்கள் ஆசையாக குளிக்க ஒரு கிணற்றிற்கு போக அங்கு அவர்கள் துரத்தி விடப்படுகிறார்கள்.

இதனால் கோபமான அந்த 4 சிறுவர்கள், தாங்களே ஒரு கிணற்றை உருவாக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.

ஆரம்பத்தில் இவர்கள் எதோ விளையாட்டுக்கு செய்கிறார்கள் என்று நினைத்தால், போக போக இவை எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதன் அழகிய உணர்வே இந்த கிணறு.

கிணறு திரைவிமர்சனம் | Kinaru Movie Review

படத்தை பற்றிய அலசல்

படத்தில் பிராதன பாத்திரமாக வரும் சிறுவர்கள் இவர்கள் எல்லாம் எதோ உண்மையாகவே அந்த கிராமத்தில் ஓடி திரிந்து இருந்த போது அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது போல் அத்தனை யதார்த்தமாக உள்ளது.

அவர்களும் துளியும் கேமரா பயம் இல்லாமல் அசத்தியுள்ளனர்.

இவர்கள் தாண்டி ஒரு பாட்டி கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. விவேக் பிரசன்னாவும் வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

கிணறு திரைவிமர்சனம் | Kinaru Movie Review

Now You See Me: Now You Don't திரை விமர்சனம்

Now You See Me: Now You Don’t திரை விமர்சனம்

படத்தின் முதல் பாதி எந்த ஒரு ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக செல்ல, இரண்டாம் பாதி மிக உணர்ச்சிபூர்வமாக செல்கிறது.

அதிலும் சிறுவர்கள் பார்வையில் கதையை வைத்து அதை சுற்றி நடக்கும் பெரியவர்கள் மனநிலை காட்டியது என பல இடங்களில் இயக்குனர் ஹரிகுமரன் தனிச்சு நிற்கின்றார்.

டெக்னிக்கலாவும் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ரசிக்க வைக்கிறது. 

கிணறு திரைவிமர்சனம் | Kinaru Movie Review

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம்.

நடிகர்கள் பங்களிப்பு.

உணர்வுபூர்வமான காட்சிகள்.

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் சில காட்சிகள்.

மொத்தத்தில் கிணறு உணர்ப்பூர்வமான ஒரு பயணம். 

கிணறு திரைவிமர்சனம் | Kinaru Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்