கூட்டுறவு சபைத் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தேசிய மக்கள் சக்தி, தற்போது தனது ஆளுமைக்குட்பட்ட பிரதேச சபையொன்றிலும் வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன்படி தேசிய மக்கள் சக்தியால் நிர்வகிக்கப்படும் படுவஸ்நுவர பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (15)தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பு
தலைவர் சஞ்சீவ கருணாசாகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி படுவஸ்நுவர வரவு செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

