ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையிலும் பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் விமானங்களை வாங்கவுள்ளது உக்ரைன்.
விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் முழுமையான விவரம் வெளியிடப்படவில்லை.
ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முயற்சி
கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா முழுப்பலத்துடன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை ஜெலன்ஸ்கி 9 முறை பிரான்ஸ் சென்றுள்ளார்.

images- business-standard
ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

