ஈழத்தமிழர்களின் சுய நிர்ணயம் அங்கீகரிக்கப்படவேண்டுமென வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு கடந்த 09 ஆம் திகதி மெல்பேர்னில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஈழத்தமிழர்களாகிய நாங்கள், நீ தியின் மூலம் அமைதியை
நோக்கிய நமது முயற்சியில் ஒற்றுமையாக நிற்கிறோம்,மேலும் நமது மக்களுக்கு
சமத்துவம், கண்ணியம் மற்றும் சுதந்திரம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி
உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்து பொங்கு தமிழ் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்த பொங்கு தமிழ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டனர்.



























