முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட கோரிக்கை

நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு
பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர்
சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இவ்விடயம் குறித்து உறுப்பினர் கார்த்தீபனால் சபையில் முன்மொழிவு
ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

குறிகாட்டுவான் – நயினாதீவு

”குறிகாட்டுவான் நயினாதீவு இடையேயான கடற் போக்குவரத்து சேவையை சீரமைப்பது
அவசியமாகும்.

குறிப்பாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் போக்குவரத்து மார்க்கமாக
இருக்கும் இந்த படகுப் போக்குவரத்து சேவையை தனியார் முன்னெடுத்து வருகின்றனர்.

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட கோரிக்கை | Special Request Safety Nainadhivu Maritime Traffic

குறிப்பாக 45 இற்கும் சற்று அதிக படகுகள் சேவையை முன்னெடுக்கின்றன.

ஆனால் குறித்த சேவையை முன்னெடுக்கும் படகுகள் சங்கம் சட்டபூர்வமான ஒன்றல்ல.

அத்துடன் படகுகளும் சேவைக்கு உகந்த தரத்தில் இருப்பதில்லை என்றும், அவை தரச்
சான்றிதள் எடுக்காது சேவையை முன்னெடுக்கின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள்
வலுவாக இருக்கின்றன.

மேலும் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம், படகுச் சேவைக்கான வரி உள்ளிட்டவையும்
முறையாக அறவிடபடுவதாக தெரியவில்லை.

எனவே படகுகளின் தரம், கட்டண அறவீடு, வரி அறவீடு, சங்கம் மற்றும் படகுகளின்
பதிவுகள் என்பவற்றை ஒரு முறையான பொறிமுறையை உருவாக்கி மக்களுக்கான
போக்குவரத்து சேவையை பாதுகாப்பானதாக முன்னெடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடையத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட சபையின் உறுப்பினர்கள்
தத்தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும், வேறு இடங்களில் இருந்து வரும் படகுகளுக்கும் வரி
அறவீடு செய்யப்படும் என்றும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.