நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நுகேகொட பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி சற்று முன்னர் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
நாமல் ராஜபக்ச
பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதுடன், களத்தில் அதிகளவான மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் பேரணிக் களத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பேரணிக்கு வரக் கூடும் என்று எதிர்பார்கப்படுகின்றது.

