நுகேகொடை பேரணிக்கு அரசாங்கம் உதவிய போதும் அங்கு பெருந்திரளானோர் வரவில்லை என சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பேரணியின் முன்வரிசையில் அமர்ந்திருந்தோருக்கு சில பொதுவான ஒற்றுமைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஊழல் மற்றும் வேறு பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள்.
உதவிய அரசாங்கம்
அந்த பேரணி நடத்தப்பட்ட இடம் ஒரு வாகன தரிப்பிடமாகும். அங்கு 1,000 பேரை கூட்டினாலே இடத்தை நிரப்ப முடியும். இன்னும் 1,000 பேரை கூட்டினால் போக்குவரத்து தடைப்படும்.

அங்கு 10,000 பேர் வரை கூடவில்லை. கூடிய சிலரை வைத்துக்கொண்டு ஏதோ பெரிய பேரணியை நடத்திவிட்டதாக நாமல் மற்றும் கம்மன்பில போன்றோர் கூச்சலிடுகின்றனர்.

அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்டது. பேரணிக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுக்குமாறு பொலிஸாரிடம் கூறியது. அப்படியிருந்தும் அங்கு கூட்டம் கூடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

