லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடிநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் நேற்று (23) நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்து சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்.
இதையடுத்து, தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுடன் அனைத்து வயதினரும் ஒருங்கிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு தமிழர் சமூகத்தின் தேசிய உணர்வையும் மற்றும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





