மாளவிகா மோகனன்
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த ஆண்டு மோகன்லால் உடன் மாளவிகா மோகனன் இணைந்து நடித்த ஹிருதயபூர்வம் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தளபதி திருவிழா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மூலம் பல கோடி லாபம்.. அடேங்கப்பா!
இதை தொடர்ந்து அடுத்ததாக ராஜா சாப் மற்றும் சர்தார் 2 ஆகிய படங்கள் இவர் நடிப்பில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான்
இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் ஷாருக்கான் குறித்து பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

இதில் “மும்பையில் ஷாருக்கான் நடித்த டான் படத்தின் படப்பிடிப்புக்கு நான் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த பள்ளி மாணவியான என் முன்னே ஷாருக்கான் வந்து நின்று ஹலோ சொன்னார். ஆனால், அவரை பார்த்து நான் ஹலோ கூட சொல்லவில்லை, அப்படியே உறைந்து போய்விட்டேன்” என மாளவிகா கூறினார்.

