முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுகேகொடை பேரணிக்கு வந்த மௌலவிக்கு கொலை மிரட்டல்..! சிஐடியில் முறைப்பாடு

நுகேகொடை பேரணியில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நடத்திய மதத் தலைவரான மௌலவி கொலை மிரட்டல் தொடர்பில் குற்றவியல் விசாரணைகள் பிரிவில் இன்று (26.11.2025) முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நிப்ராஸ் முஹம்மது மௌலவி கருத்து தெரிவிக்கையில், “21ஆம் திகதி ஒன்றிணைந்த பேரணியில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு வந்தது.

குறித்த அழைப்பையடுத்து நான் 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை செய்தேன்.

மரண அச்சுறுத்தல்

பேரணி முடிந்து பின்னேரம் நான் வீட்டுக்கு வந்த பின்னர், சமூக ஊடகங்கள் மூலம் எனது புகைப்படத்தை பதவிட்டு பல விசமப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

நுகேகொடை பேரணிக்கு வந்த மௌலவிக்கு கொலை மிரட்டல்..! சிஐடியில் முறைப்பாடு | Nugegoda Rally Cid Sri Lanka

வட்ஸ் அப், தொலைபேசி வாயிலாக ‘யார் உங்களை அழைத்து’ ‘ஏன் அங்கு சென்றீர்’ தேசிய மக்கள் சக்திக்கு ஏன் எதிராக செயற்பட்டீர்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அச்சுறுத்தினர்” என்றார்.

நுகேகொடை பேரணியில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நடத்திய மதத் தலைவரான மௌலவிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டார கொழும்பில் (24.112025) அன்று நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டிருந்தார்.

இஸ்லாமிய மதத் தலைவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்