முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்டகாசம்: ரீ-ரிலீஸ் எப்படி இருக்கு?

அட்டகாசம்

21 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் அஜித்குமாரின் ‘அட்டகாசம்’ திரைப்படத்திற்கான வரவேற்பு எப்படிஉள்ளது என்பது குறித்து பார்ப்போமா.

2004ஆம் ஆண்டு அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளி வெளியீடாக வந்த திரைப்படம் அட்டகாசம்.

சிம்புவின் மன்மதன், தனுஷின் ட்ரீம்ஸ் மற்றும் சரத்குமாரின் சத்ரபதி ஆகிய படங்களும் அட்டகாசம் படத்திற்கு போட்டியாக வெளியாகின.

அப்போது அஜித் குமாரின் கெட்டப்பிற்கே பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்கள் பலரும் தூத்துக்குடி குருவின் வெட்டி, சட்டை மற்றும் நகைகள் அணிந்த கெட்டப்பில் திரையரங்குகளுக்கு வந்து மாஸ் காட்டினர்.

அட்டகாசம்: ரீ-ரிலீஸ் எப்படி இருக்கு? | Attakasam Re Release Movie Review

ரீ ரிலீஸிலும் கொண்டாட்டம்

அதேபோன்ற ஒரு வரவேற்பு இப்போது இருக்குமா? என்ற கேள்வியுடனே சமீபத்தில் அட்டகாசம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தல படம் வந்தாலே தீபாவளிதான் என்று கூறும் அஜித்தின் ரசிகர்களும் பண்டிகையை கொண்டாட தயாராகினர்.

அட்டகாசம்: ரீ-ரிலீஸ் எப்படி இருக்கு? | Attakasam Re Release Movie Review

ஆனால் சில காரணங்களால் சொன்ன திகதியில் படம் ரீ ரிலீஸ் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்க, சில நாட்களில் மீண்டும் நவம்பர் 28ஆம் தேதி அட்டகாசம் ரீ ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த முறையும் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் கிளம்பி வந்து திரையரங்குகளில் அட்டகாசம் செய்தனர்.

புதுப்படம் வெளியானது போல் படத்தை கொண்டாடித் தீர்க்கின்றனர். ஒரு திரையரங்கில் ஆர்வமிகுதியால் பட்டாசை வெடிக்க வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின.

அட்டகாசம்: ரீ-ரிலீஸ் எப்படி இருக்கு? | Attakasam Re Release Movie Review

படம் எப்படி இருக்கு?

Gen Z கிட்ஸ் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு கண்டிப்பாக இது புது அனுபவமாக இருந்துள்ளது.

தூத்துக்குடி குரு கதாபாத்திரத்தை காணத்தான் பெரும்பாலான ரசிகர்கள் வந்துள்ளனர்.

ஆனால் அவர் 50வது நிமிடத்தில்தான் என்ட்ரி ஆவார்.

அதுவரை காமெடி, பாடல் என ரசித்த ரசிகர்கள், ஜீவா வெள்ளை வெட்டி சட்டையை அணியும்போதே ஆரவாரத்தில் இறங்கிவிட்டனர்.

தல போல வருமா பாடலுடன் குரு கதாபாத்திரம் அறிமுகம் ஆகும்போது எல்லோரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த பாடல் மற்றும் வசனங்கள் கேட்காத அளவிற்கு கூச்சலிட்டு கொண்டாடினர்.

பரத்வாஜின் பின்னணி இசையும் தெறிக்கவிட, அஜித்தின் மாஸ் பிரசென்ஸ் மற்றும் வசனங்கள் ரசிகர்களை வேற லெவல் கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

தீபாவளி தல தீபாவளி பாடலுக்கு ரசிகர்களின் ஆட்டத்தால் அரங்கம் அதிர்ந்துவிட்டது. அதே படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

என்றாலும் புதுப்படம் போன்ற பொலிவுடன் காட்சிகள் உள்ளன. சவுண்ட் குவாலிட்டியும் பக்காவாக உள்ளது.

அட்டகாசம்: ரீ-ரிலீஸ் எப்படி இருக்கு? | Attakasam Re Release Movie Review

அட்டகாசம் ரெஃபரென்ஸ்

அட்டகாசத்துடன் வெளியான மன்மதன் படத்திலேயே அட்டகாசம் படத்தை சிம்பு திரையரங்கில் செலிபிரேட் செய்வதுபோல் ஒரு காட்சி இருக்கும்.

அதேபோல் மாயாவி படத்தில் வரும் ஒரு காட்சியில், குருவின் கெட்டப்பில் அஜித்தின் ரசிகராக சூர்யா தோன்றி மிரட்டியிருப்பார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.