ஜனநாயகன்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவை ஆளும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர்.
ஆனால் அடுத்த வருடம் தான் கடைசி இனி விஜய்யின் புதிய படங்களை நாம் திரையில் காணவே முடியாது.
விஜய்யின் கடைசி படம், ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம், இந்த படத்தை எச். வினோத் நிறைய உழைப்பு போட்டு இயக்கி வருகிறார்.

வரும் ஜனவரி 9ம் தேதி பொங்கல் திருநாளைக் குறிவைத்து உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பகவந்த் கேசரி திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாக ஜனநாயகன் உருவாகி வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

டிக்கெட் புக்கிங்
படம் ஜனவரி வெளியாகவுள்ள நிலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலீஸ் தேசிய விளையாட்டு மைதானத்தில் வருகிற டிசம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது.
சுமார் 85,000 பேர் அமரும் வசதிகொண்ட இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதாம்.
தற்போது என்னவென்றால் இசை வெளியீட்டு விழாவிற்கு டிக்கெட் புக்கிங் ஓபன் செய்த 5 மணி நேரத்தில் 60 ஆயிரம் டிக்கெட் புக்கிங் ஆகிவிட்டதாம். இந்த டிக்கெட் புக்கிங் பார்க்கும் போது ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக எவ்வளவு ஆவலாக உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.
View this post on Instagram

