முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அபிநய் உருகி உருகி காதலித்த நடிகை.. இறந்தபின் உருக்கமாக போட்டிருக்கும் பதிவு

துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் உடல்நல குறைவால் கடந்த நவம்பர் 10ம் தேதி மரணம் அடைந்தார்.

அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்த நிலையில் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சைக்கு பலரும் உதவிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகையின் பதிவு

இந்நிலையில் நடிகை ஸ்ரீ அஸ்வினி என்பவர் அபிநய் தன்னை உருகி உருகி காதலித்ததாகவும், ஆனால் தான் அதை அப்போது ஏற்கவில்லை என கூறி இருக்கிறார்.

அவரது பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

அபிநய் உருகி உருகி காதலித்த நடிகை.. இறந்தபின் உருக்கமாக போட்டிருக்கும் பதிவு | Abhinay Ex Shree Ashwini Emotional Post

“உருகி உருகி காதலித்தான்..அவன் காதலை நிராகரித்தேன்..நான் பயப்படுகிறேன் என நினைத்து அவன் அம்மாவையும் அழைத்து வந்தான்.உண்மையில் இப்போதுதான் பயம் இன்னும் அதிகரித்தது.”

“பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டோம்..ஆனால் அவன் மீது காதல் வரவில்லை பயம் தான் அதிகரித்தது..என் பயத்திற்கு காரணம் அவன் அழகு..இவ்வளவு அழகாக இருப்பவன் என்னை ஏன் காதலிக்க வேண்டும் என்று என்மீதான தாழ்வு மனப்பான்மை..காதல் வேண்டாம் அபி நட்பே போதும் என்றேன், மறுத்தான் எவ்வளவோ சொன்னேன் குடிப்பழக்கத்தை விடும்படி அவன் கேட்கவில்லை..

அம்மாதான் பாவம் உன்னை திருமணம் செய்தால் அவன் திருந்திவிடுவான் நீ வருந்தாதே நான் இருக்கிறேன் என்று சொன்னார்கள். அவனையும் குடியை விட சொல்லி கெஞ்சினார்கள், முடியாது என்று மறுத்தான் காதலா மதுவா என்ற போராட்டத்தில் மதுவை மட்டும் பற்றி கொண்டான்.

அன்று நடந்த சண்டை நான் செத்தா கூட என் முகத்தில் முழிக்காதே நீ செத்தாலும் நான் வருவேன் என்று நினைக்காதே என்று சொல்லி சண்டையிட்டு பிரிந்தோம் உன்னுடன் நட்புகூட வேண்டாம் என்று .எவ்வளவோ அம்மா முயற்சி செய்தார்கள் என் மனம் இடம் தரவில்லை அவனை ஏற்க்க..ஒரு கட்டத்தில் அழைத்தான் அம்மாவும் போய் சேர்ந்து விட்டார்கள்.

நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன் வருகிறாயா என்று..சொல் பேச்சு கேட்காமல் நீ மதுவை நாடி என் மனதை நோகடித்தாய் , மன்னித்து விடு எனக்கு மணமாகி விட்டது என்றேன்..இருப்பினும் அழைத்தான் நீ சொன்னதை போல் குடியால் நோயில் அவதி படுகிறேன் என் நிழலை கூட நீ பார்க்காதே கவலையும் படாதே இது என்னக்கு ஒரு பாடம் குடியால் வாழ்பவர்களுக்கு என் சாவு ஒரு பாடமாக இருக்கும் என்றான்..அன்று வராத காதல் இன்று அவன் மீது வந்திருக்க அவனோ காற்றோடு கலந்திருந்தான்.

இவ்வாறு அவர் பதிவிட்டு இருக்கிறார்.  

View this post on Instagram

A post shared by T Gnana Leela Thankaraj (@actress_shreeashwini_)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.