நடிகர் தனுஷ் ஹிந்தியில் தற்போது நடித்து இருக்கும் தேரே இஷ்க் மெய்ன் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது. படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டாலும் தமிழ்நாட்டில் அந்த படத்தை தனுஷ் அதிகம் ப்ரோமோஷன் செய்யவில்லை.
முதல் நாளில் இந்த படம் 16 கோடி ரூபாய் நெட் வசூலை பெற்று இருந்தது. அதில் வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்ததாகும்.

இரண்டு நாட்கள் வசூல்
மேலும் இன்று சனிக்கிழமை என்றாலும் TERE ISHK MEIN படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சரிவை சந்தித்து இருக்கிறது.
இரண்டாம் நாளில் 7.68 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதனால் இதுவரை 23 கோடி மட்டுமே தனுஷ் படம் வசூலித்து இருக்கிறது.


