முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்!

புதிய இணைப்பு 

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 11,193 குடும்பங்களைச் சேர்ந்த
36,088 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

குறித்த சீரற்ற காலநிலையால் 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு
நபர்கள் காயமடைந்துள்ளது.

அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 256வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 5243
நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு 

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154
குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

06 பாதுகாப்பான
இடங்களில் 149 குடும்பங்களை சேர்ந்த 445பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2401 குடும்பங்களை சேர்ந்த 8293 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

16 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 04 பாதுகாப்பு
மையங்களில் 41 குடும்பங்களை சேர்ந்த 114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர்
கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1700 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான சேதங்கள் 

08 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு
பாதுகாப்பு மையங்களில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 373பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 338 குடும்பங்களைச் சேர்ந்த 1066 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்! | Damage In Jaffna Full Report Have Been Released

03
பாதுகாப்பு மையங்களில் 104 குடும்பங்களை சேர்ந்த 354 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 434 குடும்பங்களை சேர்ந்த 1309 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று
பாதுகாப்பு மையங்களில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 447 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 440 குடும்பங்களை சேர்ந்த 1470 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 09
பாதுகாப்பு மையங்களில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 16 வீடுகள் பகுதி
அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 59 குடும்பங்களைச்
சேர்ந்த 218 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் 81 குடும்பங்களை சேர்ந்த 284 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 08 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 03
பாதுகாப்பு மையங்களில் 28 குடும்பங்களை சேர்ந்த 98பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக தங்குமிடங்கள் 

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 1771 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 176 குடும்பங்களை சேர்ந்த 525 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றும் அடிப்படைக்
கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 4
குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 779 குடும்பங்களை சேர்ந்த 2503 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 03 பாதுகாப்பு மையங்களில் 191 குடும்பங்களைச் சேர்ந்த
638பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்! | Damage In Jaffna Full Report Have Been Released

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும்
ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக்
கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும்
சேதமடைந்துள்ளன.

இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217
பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 381 குடும்பங்களை சேர்ந்த 1155 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். 17 வீடுகள் பகுதி அளவில்
சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது.

03
பாதுகாப்பு மையங்களில் 35 குடும்பங்களை சேர்ந்த 135 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 44 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 579 குடும்பங்களை சேர்ந்த 1774 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், 06 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 03
பாதுகாப்பு மையங்களில் 132 குடும்பங்களை சேர்ந்த 352 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.