முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்காக பாகிஸ்தானுடனான பகையை விட்டுக்கொடுத்த இந்தியா

“டித்வா”சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையை இந்தியா ஊடகங்கள் ஆதரமற்றதாக கூறி நிராகரித்துள்ளன.

எனினும் இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வெளி பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை பரிசீலித்து, அதற்கான அனுமதியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், “ஆதாரமற்ற மற்றும் தவறாக வழிநடத்தும்” கூற்றுக்களை அவர்கள் கடுமையாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளனர்.

மோசமான சூழ்நிலை

இதன்படி பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில், திங்கள்கிழமை (01) மாலை 5:30 மணிக்கு (IST) 4 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, உதவிகளை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைந்து இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுளதாக கூறப்படுகிறது.

இந்தியா அனுமதி

பாகிஸ்தான் நேற்று (01.12.2025) இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி கோரியிருந்த நிலையில் இந்திய அரசாங்கம் நேற்றைய தினமே தேவையான அனுமதியை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்காக பாகிஸ்தானுடனான பகையை விட்டுக்கொடுத்த இந்தியா | Indian Airspace Opened Pakistani Relief Flights

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் இராணுவ பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, “டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு சேவைகளை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே இலங்கையில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.