முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை உலுக்கிய “டித்வா”: ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஆவணங்கள் சேதம்!

“டித்வா” புயலின் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் 100,000 க்கும் அதிகமான அரசாங்க ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் நதீரா ரூபசிங்க தெரிவித்தார்.

அதன்படி, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், வைத்தியசாலைகள், பிரதேச சபைகள், மாகாண சபைகள், திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பல அரசாங்க நிறுவனங்களின் ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஆவணங்கள்

பல தசாப்தங்களாக பழமையான நீதிமன்ற ஆவணங்கள், சட்ட சான்றுகள், ஓய்வூதியங்கள் மற்றும் சலுகைகளைப் பாதிக்கும் கோப்புகள், தணிக்கை மற்றும் பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நிதிப் பதிவுகள், நிர்வாகத்தின் வரலாற்றைப் பராமரிக்க அவசியமான பொது ஆவணங்கள் அத்துடன் நாட்டின் வரலாற்றைச் சொல்லும் வரலாற்று ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை உலுக்கிய “டித்வா”: ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஆவணங்கள் சேதம்! | Government Documents Damaged Due To Weather

இதுவரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் உள்ள ஆவணங்களே அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரிடர் பாதித்த மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் இருந்து மாத்திரமே இதுவரையில் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளில் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை, மீளுருவாக்கம் செய்ய முடியாத பல பொது ஆவணங்கள் நூற்றுக்கணக்கான கன மீட்டர் வெள்ள நீரினால் சேதமடைந்துள்ளதாக தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.