நாட்டில் ஏற்பட்ட பேரழிவின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்புத்தகத்தில் பதிவிட்டு கொண்டு இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை மீட்க அதிகாரிகள் களத்தில் முயற்சித்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கலாவெவ பேருந்தில் இருந்த சுமார் 70 பேர் எப்போது தமது உயிரை இழப்போம் என்று பீதியில் இருந்தனர்.
கடற்படையினர்
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் என்று முகப்புத்தகத்தில் எழுதினர்.
ஆனால் அந்த நேரம், எமது கடற்படையினர் அந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்ததனர்.

மிகவும் கடினமான சூழ்நிலையில் அவர்கள் அந்த வெள்ளநீரைத் தோற்கடித்து மக்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
இதன் விளைவாக பேருந்தில் இருந்தவர்கள் ஒரு கூரையின் மீது ஏற்றப் வரப்பட்டனர் பின்னர் மிகக் குறுகிய நேரத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது.
சிக்கிய குழு
அந்த நேரத்தில் கடற்படை பயணித்த படகும் இயங்க முடியாததாகிவிட்டது, இறுதியில் அந்தப் படகில் இருந்த கடற்படை அதிகாரிகளும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்தக் கூரையில் ஏற வேண்டியிருந்தது.
அவர்கள் 18 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு பாரிய வெள்ளத்தில் ஆஸ்பெஸ்டஸ் கூரையில் சுமார் 70 பேர் உயிர் பிழைக்க தைரியம் அளித்தனர்.

மிகவும் கடினமான முயற்சிக்குப் பிறகு, வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருவர் இறந்தார்.
எங்களிடம் திறமையான முப்படையினரும் காவல்தறையினரும் உள்ளனர், வித்திகுலி பண்ணையில் சிக்கிய குழுவை மீட்கச் சென்ற இரண்டு படகுகளும் பழுதடைந்தன, இறுதியாக மறுநாள் அதிகாலையில் அவர்கள் மீட்கப்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

