அஸ்கிரி தரப்பின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்துள்ளார்.
முக்கிய கலந்துரையாடல்
குறித்த சந்திப்பானது, இன்று (06) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அஸ்கிரி மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் உரையாடலிலும் ஈடுபட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், அஸ்கிரிய தரப்பின் அனுநாயக அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த அனுநாயக தேரரை சந்தித்து, சிறிது நேரம் உரையாடினேன் என தெரிவித்துள்ளார்.

