முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சிக்கும் சங்கு கூட்டணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் (ITAK), ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் 9இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், மாட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் தலைமை செயலகத்தில் இன்று (07) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பில் கலந்துகொண்டோர்

அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசிய
கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ்
பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு
சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம்
இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சிக்கும் சங்கு கூட்டணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு | Important Meeting Between Itak And Dtana In Jaffna

இந்த சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பேசப்பட்ட
விடயங்களில் ஜனாதிபதி பெருமளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை எனவும்,
அதுபற்றி திருப்தியளிக்கக்கூடிய சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை
என்று தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளடங்கலாக நாட்டின் சகல
பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில்
சமூகக்குழுக்களை ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு
அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் மக்கள் இயக்கமொன்றை
உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.