பிக்பாஸ் 9
விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது.
இந்த தொலைக்காட்சியில் 100 நாட்கள் என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் வகையில் ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து அதிரடி திருப்பங்களுடன் ஓடுகிறது.


மணிரத்னம் இயக்கிய கடல் பட நடிகை துளசியா இது?.. உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியலையே
சம்பளம்
கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிரஜன் வெளியேறினார்.
வீட்டைவிட்டு வெளியே வந்தவர் விஜய் சேதுபதியுடன் செம கலாட்டா செய்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் வீட்டில் 35 நாட்கள் இருந்துள்ளார்.
ஒரு நாளைக்கு ரூ. 30,000 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றவர் ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.


