எனது பிள்ளைக்கு நடந்ததுபோன்று இனியொருபோதும் வேறு பிள்ளைகளுக்கு நடக்ககூடாது
எனவும் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது மகன் தாக்கப்பட்டதன் காரணமாகவே அவர்
வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அண்மையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணமாக
சிறைக்கைதி ரினோஜனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முறையான விசாரணைகள்
முன்னெடுக்கப்படவேண்டும் என அண்மையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணமாக
சிறைக்கைதி ரினோஜனின் தாயார் மற்றும் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முழுமையான விசாரணை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு
சிறைச்சாலையில் வைக்கப்பட்டு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் மரணமான இளைஞனின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகள்
முன்னெடுக்கப்படவேண்டும் என பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கோரிக்கை
விடுத்துள்ளதுடன் அவர்களுக்கு ஆதரவாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்
குழுவின் பணிப்பாளர் சுதேஸ் நந்திமாசில்வா இணைந்துகொண்டார்.

இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(12) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்த இளைஞனின் தாய் மற்றும் சகோதரி, சிறைக்கைதிகளின் உரிமைகளை
பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சுதேஸ் நந்திமாசில்வா ஆகியோர் கருத்து
தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து நடந்துசென்ற எனது மகனை அடுத்தநாள் பொலிஸ் நிலையத்தில் மயங்கிய
நிலையிலேயே சிறைக்கூண்டுக்குள் கண்டேன்.முதல்நாள் இரவு எனது கையினால் உணவு
வழங்கிய பிள்ளைக்கு அடுத்தநாள் என்ன நடந்தது என்ற தெரியாத நிலையே இருந்தது.
வைத்தியசாலையில் அனுமதி
அடுத்தநாள் உணர்வற்ற நிலையிலேயே நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று சிறைச்சாலைக்கு
கொண்டுசென்றார்கள்.
சிறைச்சாலைக்கு கொண்டுசென்று இரு நாட்களுக்கு பின்னர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

நான் வைத்தியசாலைக்கு
சென்று எனது மகனை விசாரித்தபோது அடிபட்டுவந்தவனா என்று அங்கிருந்தவர்கள்
கேட்டு எனது மகனைக்காட்டினார்கள்.
அதனை கேட்டபோதே நான் உணர்ந்தேன் மகனை
தாக்கிதான் இவ்வாறு ஆக்கியுள்ளார்கள் என்று.எனது மகன்
கொலைசெய்யப்பட்டுள்ளார்.
எனது மகனின் கொலைக்கு நீதிவேண்டும்.
இதுபோன்ற ஒரு
சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது என மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணமாக
சிறைக்கைதி ரினோஜனின் தாயார் டிலிமா தெரிவித்தார்.
எனது தம்பியை போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்று கூறுகின்றார்கள்.
அதனை
அவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
வீட்டில் நல்ல
ஆரோக்கியத்துடன் இருந்தவன் பொலிஸ் நிலையத்திற்கு போன பின்பா சுகவீனமானவன்
என்பதை வெளிப்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணமாக
சிறைக்கைதி ரினோஜனின் சகோதரி வேண்டுகோள் விடுத்தார்.
வேண்டுகோள்
எந்த பரிசோதனையில் எனது சகோதரன் போதைப்பொருள் பாவித்துள்ளார் என்பதை
உறுதிப்படுத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்றவேண்டுகோளை
முன்வைப்பதுடன் எனது தம்பி சுகவீனமுற்று சாகவில்லை,தாக்கப்பட்டே
உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவேண்டும்
எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனது தம்பியை கொண்டுசெல்லும்போது அவர் அணிந்த ஆடைகளில் எந்தவித பொக்கட்டுகளும்
இல்லை.ஆனால் பொக்கட்டில் இருந்து போதைப்பொருளை மீட்டதாக
கூறுகின்றனர்.
சோடிக்கப்பட்ட குற்றங்களை சுமத்துகின்றனர்.
எனது தம்பியின் மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் இது தொடர்பிலான முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு எமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் எனவும்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

