படையப்பா
ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று படையப்பா. இதனால் எந்த ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இல்லாத வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது.

எதிர்நீச்சல் சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் பட்டம்மாள்.. வெளிவந்த புரோமோ
வசூல்
ஆம், முன்பதிவில் மட்டுமே இப்படம் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

