AK 64
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கார் ரேஸில் கலந்துகொண்டிருந்த அஜித்தை நேரில் சென்று சந்தித்தார் நடிகை ஸ்ரீலீலா. இவர் AK 64 படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிக்கு 2026 பிப்ரவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளாராம்.

பிறந்தநாளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் எங்கே சென்றுள்ளார் பாருங்க… குடும்ப போட்டோ
அப்டேட்
இந்த நிலையில், AK 64 திரைப்படத்தில் நடிக்கப்போகும் மற்றொரு நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் ரெஜினா நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இவர் ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

