ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற கூடும் என பிவித்துறு எல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு எல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
புனரமைப்பு செயற்பாடுகள்
தொடர்ந்துரையாற்றிய அவர், பேரிடரில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் புனரமைப்பு செயற்பாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை. அதனால் ஒரு வருடம் சுமுகமாக கடந்து போகும்.
அதன் பின்னர் வீதி, பாலம் மற்றும் போக்குவரத்துக்கான வசதிகள், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் போகும் போது மக்களால் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம்.

அப்படி நடக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. முடிந்தளவு நிவாரண நிதிகளை பெற்று புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்குமாறு கோருகிறோம்.
மேலும் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி அலுவலகத்தை விட பெலவத்தையில் இருந்து தான் அதிக அழுத்தங்கள் வருதாக கிராம சேவகர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.
கிராம சேவகர்கள் தான் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குபவர்கள். அதனால் அவருக்கு தான் தெரியும் என்ன நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

