பராசக்தி
மதராஸி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கிறது பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார்.

மேலும் அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பேசில் ஜோசப் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படம் வருகிற 2026 ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம், 100 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகை: நீதிமன்றம் போட்ட உத்தரவு
ஓடிடி உரிமை
சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு எப்போதுமே ப்ரீ பிசினஸ் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த நிலையில், பராசக்தி படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. ஏனென்றால் இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 52 கோடிக்கு ஜீ5 வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் அதிக தொகைக்கு ஓடிடியில் விற்பனை செய்யப்பட்ட திரைப்படமும் இதுவே ஆகும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.

