ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2, சாவா, அனிமல் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த நாயகிகளில் இவரும் ஒருவராகியுள்ளார்.

மேலும் சோலோ ஹீரோயினாக இவர் நடித்த Girlfriend திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்..
திருமணம்
நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆனால், இதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2026 பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் என கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

இலங்கை ட்ரிப்
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நெருங்கிய தோழிகளுடன் இலங்கைக்கு ட்ரிப் சென்றிருக்கிறார். இரண்டு நாட்கள் விடுமுறையில் இந்த Girls ட்ரிப் என அவரே பதிவு செய்துள்ளார். ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
View this post on Instagram

