மலையகத்தில் பல இடங்களில் கற்பாறைகள், மண்மேடுகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ள கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு, ஜனாதிபதியுடன் கலந்து பேசி வேறு ஒரு இடத்தில் இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுக்க பல மாதங்கள் ஆகும் என்பதால் தான் வடக்கு, கிழக்கில் மலையக மக்கள் குடியேறுவார்களா என்ற ஒரு கேள்வியைத் தான் நான் எழுப்பினேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும், நான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியதும், அந்த மக்களாகவே இணைந்து நாங்கள் வடக்கு – கிழக்கில் குடியேறத் தயார் என்று என்னிடம் கூறினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், மலையக மக்கள் அனைவரையும் வடக்கு – கிழக்கிற்கு அழைத்துச் சென்று குடியமர்த்துவோம் என்று நான் ஒருபோதும் சொல்லவுமில்லை, அப்படி குடியேற்ற வடக்கில் காணிகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தன்னுடைய பல கருத்துக்களை நல்ல எண்ணத்துடன் பார்க்காமல், எதிர்மறையான கருத்துக்களை பிரபலப்படுத்துவதாகவும் மனோ கணேசன் அங்கலாய்த்துள்ளார்.
அதேசமயம், கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகள், பல்வேறு உயர் பதவிகளை வகித்த போது மலையக மக்களின் இந்த பிரச்சினைகள் உங்களுக்கு தெரியவில்லையா என எமது செய்தியாளர், மனோ கணேசன் எம்.பியிடம் கேள்வி எழுப்பிய போது சற்று அது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கொந்தளித்து பேசியமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

