வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால்
அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை
வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்
பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றையதினம்(17) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர்
தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம்
தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தின்
பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உதவிபுரிந்தாலும் முழுநாட்டையும்
கட்டியெழுப்ப முடியாது விவசாயம் மற்றும் பெருந்தெருக்களை
மீளக்கட்டியெழுப்புவதற்கு பலகோடி ரூபா தேவை அரசாங்கம் அன்பளிப்பு செய்வோர்
மாநாட்டை நடாத்தவுள்ளதாக அறிகின்றோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் வரவு
செலவுத்திட்டத்தில் மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு
செய்திருக்கிறது.
தேர்தலை விரைவாக நடாத்தி மக்கள் பிரதிநிகளிடம் அதிகாரங்களை
கையளித்தால் மாகாண சபைகள் மூலம் புனருத்தான வேலைகளை மேற்கொள்ள முடியும்
புலம்பெயர்ந்தோர் மூலமும் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே அரசாங்கம்
மாகாணசபை தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தால்
மாத்திரமே வெள்ள அனர்த்த பாதிப்பிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் என
தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு
தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் இந்தியா சென்றமை
தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பல்வேறு
தரப்பினருடன் பேசுவதற்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில்
விக்ரமசிங்க, மைத்திரி காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை கொண்டு
வந்தால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு உள்ளதாகவும் சமஸ்டி தீர்வை இலங்கை
அரசாங்கத்திடம் வலியுறுத்தும் நோக்குடன் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த
அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான எந்த
முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இந்த விடயங்களை எடுத்துக்கூற சென்றுள்ளதாக
அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

