இலங்கை தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கட்சியின் ஸ்தாபகரின் உருவச்சிலைக்கு தமிழரசுக் கட்சியினரால் மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (18) இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவிடத்திற்கு சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியினர் இவ்வாறு மரியாதை செலுத்தினார்.
மாலை அணிவித்தனர்
இதன்போது தமிழரசுக் கட்சியினர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள்
மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என
பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



