முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோதமாக தமிழர்களை தடுத்து வைத்த இங்கிலாந்து: வழக்கில் உறுதி

இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இலங்கைத் தமிழர்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடானது லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர்.

மேன்முறையீடு 

குறித்த தீவில் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமையால் இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டவிரோதமாக தமிழர்களை தடுத்து வைத்த இங்கிலாந்து: வழக்கில் உறுதி | Diego Garcia Tamils Detention Case Upheld Uk Court

அத்தோடு முன்னதாக உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றில் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும், குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து தீவுக்கான ஆணையாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டது.  

தடுப்புக்காவல் 

இந்த நிலையில், அவரது மேன்முறையீட்டின் நான்கு காரணங்களும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக தமிழர்களை தடுத்து வைத்த இங்கிலாந்து: வழக்கில் உறுதி | Diego Garcia Tamils Detention Case Upheld Uk Court

இதனடிப்படையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 60 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை நீண்ட காலத்திற்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமைக்காக பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்