கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து வா வாத்தியார் திரைப்படம் வெளிவரவுள்ளது.
மேலும் சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி கைதி 2 படமும் உள்ளது. ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bha Bha Ba: திரை விமர்சனம்
கார்த்தியின் மகள்
நடிகர் கார்த்திக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் முதலில் பிறந்தவர்தான் மகள் உமையாள். இவர் 2013ஆம் ஆண்டு பிறந்தார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது மகள் உமையாளுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், கார்த்தியின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அவரின் புகைப்படம்..

