படையப்பா
கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, ராதாரவி, நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


லியோ சாதனையை முறியடித்த ஜனநாயகன்.. முன்பதிவு வசூல் விவரம்
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை 25 ஆண்டுகள் கழித்து ரஜினியின் 75வது பிறந்தநாளுக்கு கடந்த வாரம் வெளியிட்டனர். ரீ ரிலீஸான படையப்பா வெற்றிகரமாக 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், இந்த 7 நாட்களில் படையப்பா படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸில் இப்படம் உலகளவில் ரூ. 17.2 கோடி வசூல் செய்துள்ளது.


