எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் ரசிகர்களை அப்பாடா என ரிலாக்ஸ் செய்யவே விடவில்லை.
எனது சீரியலை ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்போடு தான் பார்க்க வேண்டும் என கதைக்களத்தை அமைத்து வருகிறார். சக்தி கடத்தப்பட்ட கதைக்களம் முடிவடைந்து இப்போது ஜனனி தொழில் திறப்பு விழாவில் என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு தான் உள்ளது.

வண்டியை எரிக்க பார்ப்பது, ஜனனி, நந்தினி, ரேணுகாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பார்ப்பது என குணசேகரன் என்னென்னமோ குடைச்சல் கொடுக்கிறார். ஆனால் தடைகளை தாண்டி ஜனனி தொழில் தொடங்கும் நாளை நோக்கி வேலை செய்து வருகிறார்.

ஸ்பெஷல் புரொமோ
கதைக்களம் பரபரப்பாக செல்ல இப்போது ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் குணசேகரன் திறப்பு விழா யாரையும் முடித்துவிட பிளான் போட்டுகிறார், திறப்பு விழா இப்போது இறப்பு விழாவாக மாறப்போகிறது என்கிறார். சக்தி ஜனனியிடம் திறப்பு விழாவை 2 நாள் தள்ளிப்போட முடியுமா என கேட்கிறார்.
அதேபோல் கொற்றவை கண்டிப்பாக பிரச்சனை செய்வார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என கூற ஜனனி வந்த உதவியையும் வேண்டாம் என்கிறார். இதோ ஸ்பெஷல் புரொமோ,

