முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொம்புசீவி திரை விமர்சனம்

கொம்புசீவி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மெகா ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் தொடர் தோல்வியால் கம்பேக் ஆக காத்திருக்க, திரைத்துறையில் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற ஷண்முக பாண்டியன் காத்திருக்க, இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கொம்புசீவி எப்படியுள்ளது பார்ப்போம்.

கொம்புசீவி திரை விமர்சனம் | Kombuseevi Movie Review

கதைக்களம்

சரத்குமார் ரொக்கபுலி என்ற பெயரில் ஊரில் பெரிய கட்டபஞ்சாயத்து செய்து வருபவர், அந்த ஊரில் எது என்றாலும் முன்னால் வந்து நிற்பவர், அப்படியிருக்க ஷண்முக பாண்டியன் தாய், தந்தை இழந்து சிறு வயதிலே கஷ்டப்பட அவரை எடுத்து வளர்க்கிறார் சரத்குமார்.

இவர்கள் ஊர் விட்டு ஊர் போதை பொருள் கடத்தும் வேலை பார்ப்பவர்கள், இப்படி ஊரிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதை அறிந்து நாயகி லைலா போலிஸ் அதிகாரியாக அந்த ஊருக்கு வந்ததுமே தன் அதிரடியை காட்டுகிறார்.

கொம்புசீவி திரை விமர்சனம் | Kombuseevi Movie Review

ஆனால், அவர் ஸ்டைஷனில் பிடித்து வைத்த 10 கிலோ போதை பொருள் தொலைந்து போகிறது. இதனால் ஷண்முக பாண்டியன் உதவியை லைல நாட, அவரும் 10 கிலோ போதை பொருள் ரெடி செய்து தருகிறார்.

அந்த நேரத்தில் லைலா, ஷண்முக பாண்டியனை கையும் களவுமாக பிடிக்க, அதன் பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் திருப்பி என்ன செய்தார்கள் என்பதே மீதிக்கதை.

கொம்புசீவி திரை விமர்சனம் | Kombuseevi Movie Review

படத்தை பற்றிய அலசல்

ஷண்முக பாண்டியன் கிராமத்து நாயகனாக படத்திற்கு படம் செம ஸ்கோர் செய்கிறார், ஆக்‌ஷன், காமெடி டயலாக் டெலிவரி என அனைத்திலும் தூள் கிளப்புகிறார், இன்னும் டான்ஸ், கொஞ்சம் காதல் காட்சிகள் மட்டும் முன்னேற்றம் தேவை.

படத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமார், செகண்ட் இன்னிங்ஸ் இவர் காட்டில் தான் மழை போல, அனைத்து ரோல்களையும் அசலாட் ஆக செய்கிறார், ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனுஷன் கதாபாத்திரத்தை அப்படியே ரகளையாக கண்முன் கொண்டு வந்துள்ளார்.

கொம்புசீவி திரை விமர்சனம் | Kombuseevi Movie Review

படம் போதை பொருள் கடத்துவது என்பதாலேயே கதை மாந்தர்கள் மீது நமக்கு ஒரு பெரிய எமோஷ்னல் ஒட்டவில்லை, அதுனாலேயே படத்தின் பல காட்சிகள் நமக்கு ஒட்டாமலே செல்கிறது.

அதோடு போலிஸுக்கு பயந்து மலையில் ஒதுங்கும் காட்சி, நீதிமன்றத்தில் செய்யும் ரகளை, பூசாரியாக வரும் கதாபாத்திரம், தன்னை புகழ்ந்து பேசினார் பெரும் படும் கதாபாத்திரம் என பொன்ராம் டச் ஆங்காங்கே உள்ளது ரசிக்க வைக்கின்றது.

ஆனால், படம் காமெடியாகவே நகர திடிரென ஹெவி எமோஷ்னல் ட்ராக் உடன் செல்வது நமக்கே பெரிய குழப்பம் நிகழ்கிறது, இது தேவையா காமெடியாகவே போயிருக்கலாமே என்று நினைக்க வைக்கிறது.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அப்படியே கிராமத்தை கண்முன் கொண்டு வர, யுவன் பாடல்கள், பின்னணி இசை என நீண்ட நாள் கழித்து கலக்கியுள்ளார்.

க்ளாப்ஸ்

சரத்குமார், ஷண்முக பாண்டியன் காம்போ

சில காமெடி காட்சிகள்

யுவன்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி எதை நோக்கி செல்கிறது என்றே தெரியாமல் செல்வது.

கிளைமேக்ஸ்

மொத்தத்தில் பொன்ராம் கம்பேக் இல்லை என்றாலும் ஷண்முக பாண்டியனுக்கு ஒரு ஆறுதல் படம்.

2.5/5 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.