முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்சியின் கொள்கைகளில் இருந்து திசைமாறிய ஜே.வி.பி. – விமல் வீரவன்ச பகிரங்கக் குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியானது (ஜே.வி.பி.) அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து
தற்போது திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை
விமல் வீரவன்ச ஆரம்பித்தார்.

எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரைக் கட்சியை விட்டு
வெளியேற்றும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது.

அதற்கு முன்னதாகவே அவர் பதவி
விலகி, தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

அத்துடன், மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளையும்
பெற்றுக்கொண்டார்.

கடும் விமர்சனங்கள்

கடந்த பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்த பின்னர் ஜே.வி.பி. மீது விமல் வீரவன்ச கடும்
விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

கட்சியின் கொள்கைகளில் இருந்து திசைமாறிய ஜே.வி.பி. - விமல் வீரவன்ச பகிரங்கக் குற்றச்சாட்டு | Wimal Weerawansa Publicly Accuses Jvp

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர், “நான் இருந்த காலத்தில் இருந்த ஜே.வி.பி. அல்ல தற்போது காணப்படுகின்ற கட்சி.
செயல் என்பதைவிட வாய்சொல் வீரர்களாகவே அந்தக் கட்சியினர் செயற்படுகின்றனர்.

அதுமட்டுமல்ல இந்தியா மற்றும் அமெரிக்காவுக்குச் சார்பாகச் செயற்படும்
நிலைமையே காணப்படுகின்றது. தெளிவானதொரு கொள்கையும் அந்தக் கட்சியினரிடம் இல்லை.

கட்சித் தலைமையகத்தில் புரட்சியாளர்களின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு,
அவர்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில்
பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.”  என்றார்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.