புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த இராணுவ அதிகாரிக்கு சிவஞானம் சிறீதரன், ஏன் ஆதரவாக வாக்களித்தார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் உறுப்பினரான தமிழரசுக் கட்சியின் சிறீதரன் எம்.பி , சேவையிலுள்ள இராணுவ அதிகாரியான ராஜசிங்கவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
ஜனாதிபதி பரிந்துரைத்த பெயர்
இது உண்மையாக இருந்தால், சிறீதரன் எம்.பி. தான் வாக்களித்ததற்கான காரணத்தை தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டும், என அம்பிகா சற்குணநாதன் தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகும். ஏனெனில் இது கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலகத்தின் சுதந்திரம், நல்லாட்சி அவரிடம் வேரூன்றியுள்ள இராணுவ கொள்கை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

இந்த உண்மைகளை அறிந்த நீங்கள், இந்த நபருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ‘சிஸ்டம் சேன்ஜ்’, இது அவற்றில் ஒன்று அல்ல, என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கணக்காய்வாளர் நாயகம் பதிவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த ஓ.ஆர். ராஜசிங்கவின் பெயரை அரசியலமைப்புச் சபை நிராகரித்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

