நடிகர் சரத்குமார் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர்.
தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார் அவர். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் Dude படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஒருபக்கம் இருந்தாலும் சரத்குமார் தான் நடத்தி வந்த அரசியல் கட்சியை பாஜக உடன் இணைத்துவிட்டார். தற்போது அந்த கட்சியில் தான் அவர் இருந்து வருகிறார்.

71 வயதிலும் இப்படி
தான் 71 வயதிலும் இப்படி இருக்க காரணம் என்ன என சரத்குமார் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
“71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன” என சரத்குமார் கூறி இருக்கிறார்.


