பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பரபரப்பின் உச்சமான கதைக்களத்துடன் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்.
இப்போது கதையில் பாண்டியனுக்கு மயில் சொன்ன அனைத்து பொய்களும் தெரிய வர உடனே குடும்பத்தினர் அனைவரும் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.
ஆனால் மயில் தனது வாழ்க்கை இப்படி ஆனது நினைத்து மிகவும் கஷ்டத்தில் உள்ளார், சரவணன் விவாகரத்து கேட்டது நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்.

எபிசோட்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில், மயில் போன் செய்து அழுததும் வருத்தம் அடைந்த மீனா அவரை வீட்டிற்கு சென்று பார்க்கிறார்.
மயில், மீனாவை பார்த்ததும் கட்டியணைத்து அழுகிறார். பின் எனக்காக நீ வீட்டில் பேசினாயா, சரவணன் மாமாவை நான் ஒருமுறை சந்தித்த பேச வேண்டும், எனக்கு உதவுகிறாயா என கேட்கிறார்.

உடனே மீனா வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர், காயப்பட்டுள்ளார்கள், கொஞ்சம் நேரம் கொடுங்கள். எல்லோரின் மனநிலை மாறும் வரை நீங்கள் கொஞ்சம் பொறுத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்கிறார்.
மயிலிடம் பேசிவிட்டு மீனா கிளம்பும் போது அவரது அம்மா நகை விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம் என்கிறார். மீனாவும் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

