சீரியல்கள்
சினிமா மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் தான் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெறுகிறது.
இதனாலேயே எல்லா தொலைக்காட்சியும் மிகவும் தரமான தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சரி 2025ம் வருடம் முடிவுக்கு வரப்போகிறது. இந்த பதிவில் நாம் இந்த வருடத்தில் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் முடிவுக்கு வந்த சீரியல்கள் பற்றிய விவரத்தை காண்போம்.
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் இந்த வருடம் நிறைய சீரியல்கள் என்ட்ரி ஆனதும், முடிவுக்கு வந்த சில தொடர்களும் உள்ளது.
அப்படி நாம் இந்த பதிவில் 2025 ஆண்டில் முடிந்த தொடர்கள் குறித்து பார்ப்போம்.
ரஞ்சனி- 151 எபிசோட்
புன்னகை பூவே- 319 எபிசோட்
செவ்வந்தி- ஜுன் மாதம் முடிந்தது
இராமாயணம்- செப்டம்பர் முடிந்தது

விஜய் டிவி
பாக்கியலட்சுமி- 1469 எபிசோட்
நீ நான் காதல்- 384 எபிசோட்
ஆஹா கல்யாணம்- 600 எபிசோட்
தங்கமகள்- 477 எபிசோட்

இந்த தொடர்கள் தவிர பொன்னி, வீட்டுக்கு வீடு வாசப்படி, பனிவிழும் மலர்வனம் போன்ற தொடர்களும் முடிந்தன.
ஜீ தமிழ்
இந்த தொலைக்காட்சியில் மாரி, மௌனம் பேசியதே, வள்ளியின் வேலன், ராமன் தேடிய சீதை, நினைத்தாலே இனிக்கும், மனசெல்லாம், நினைத்தேன் வந்தாய், இதயம் போன்ற தொடர்கள் முடிவுக்கு வந்தன.


