சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
இன்றைய எபிசோடில், க்ரிஷ்ஷை கடத்தி வைத்த பிஏவை பிடிக்க முத்து செம பிளான் போட்டு அவர்களை பிடிக்கவும் செய்கிறார். ஆனால் கடத்தல் காரர்கள் தப்பித்து விட முத்து, மனோஜ், க்ரிஷுடன் வீட்டிற்கு வருகிறார்கள்.

பின் க்ரிஷை கடத்தியது யார், அவர்களுக்கு இவனை பற்றி எப்படி தெரியும் என குடும்பமாக பேசுகிறார்கள். அடுத்து குழந்தை கடத்தல் காரர்களை பிடித்ததற்காக அருணிற்கு உயர் அதிகாரி வீட்டிற்கு வந்து வாழ்த்து கூறுகிறார்.

கடைசியாக விஜயா பார்வதி வீட்டிற்கு செல்கிறார், அங்கு சிந்தாமணியும் உள்ளார். அங்கு விஜயா பார்வதியை பற்றி தவறாக பேசுகிறார், இதனால் அவர் மனம் உடைந்து போகிறார்.
அடுத்து பார்வதியின் மகன் திடீரென வீட்டிற்கு வந்து அவருடன் யூடியூபில் பணிபுரியும் நபருடன் சேர்த்து வைத்து தவறாக பேசுகிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், பார்வதி நான் சேர்த்த நண்பர்களில் மோசமானவள் நீ நான், இனி நீ இங்கே வராதே. எனது வீட்டில் உனது கிளாஸை நடத்தாதே, வெளியே போ என கோபமாக கூறுகிறார்.
அப்படி என்ன நடந்தது, பார்வதி ஏன் விஜயாவை அப்படி கூறினார் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

