நடிகை நிதி அகர்வால் ஹைதராபாத்தில் நடந்த ராஜா சாப் பட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியில் வரும்போது கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டார். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பிரபலங்கள் பலரும் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் நடிகைகள் வெளியில் வரும்போது கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என சிவாஜி என்ற தெலுங்கு நடிகர் பேசி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.
சர்ச்சைக்கு பிறகு மன்னிப்பு கேட்ட நடிகர் சிவாஜி, இருப்பினும் தான் சொன்ன கருத்தில் இருந்து மாறப்போவதில்லை என கூறி இருக்கிறார். நிதி அகர்வால் சம்பவத்திற்கு பிறகு தான் நடிகைகள் உடை பற்றி தனக்கு பேச தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி அகர்வால் பதிலடி
நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்ததை பற்றி வந்திருக்கும் விமர்சனத்திற்கு நடிகை நிதி அகர்வால் பதில் கொடுத்து இருக்கிறார்.
“Blaming a Victim is called Manipulation” என அவர் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.


