சன் டிவி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து பேச்சு வருகிறதோ இல்லையோ சீரியல்கள் குறித்து தான் நிறைய தகவல்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கிறது.
அப்படி இப்போது சன் டிவியில் ஒரு புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது, அது என்ன தொடர் என்றால் இரு மலர்கள்.
ஏற்கெனவே தொடர் குறித்து நிறைய தகவல்கள் கசிந்த நிலையில் ஏன் கசியும் தகவல்களை பார்க்க வேண்டும் இதோ புரொமோ வெளியிடுகிறோம் பாருங்கள் என முதல் புரொமோ வெளியிட்டுள்ளார்கள்.

கதை
குடும்ப பிரச்சனைக்காக வேலைக்கு செல்லும் பெண்ணின் கண்டிப்பான அப்பாவின் கதையாக இந்த தொடர் இருக்கும் என தெரிகிறது. அந்த பெண்ணிற்கு முழு ஆதரவாக இருக்கும் அவரின் தோழியை சுற்றிய கதை எனவும் தோன்றுகிறது.
புரொமோ வந்துவிட்டது, ஆனால் எப்போது முதல் ஆரம்பம் என தெரியவில்லை. இதோ புரொமோ,

